close
Choose your channels

அஜித், விஜய் படங்களில் பாடிய பிரபல பாடகர் மாரடைப்பால் மரணம்: அதிர்ச்சியில் இசை ரசிகர்கள்

Wednesday, June 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாடிய பாடகர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த தகவல் இசை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் உள்பட 11 இந்திய மொழிகளில் சுமார் 6 ஆயிரம் பாடல்களை பாடியவர் பிரபல பாடகர் கேகே என்ற கிருஷ்ணகுமார். கடந்த 1968-ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவருக்கு சிறுவயதிலேயே இசை ஞானம் இருந்தது. இதனை அடுத்து பாலிவுட் திரையுலகில் ஏராளமான பாடல்களை பாடிய கேகேவை, தமிழுக்குக் கொண்டுவந்த பெருமை இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுக்கு உண்டு.

’காதல் தேசம்’ திரைப்படத்தில் ’கல்லூரி சாலை’ என்ற பாடலின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின் ’மின்சார கண்ணா’ ’விஐபி’ ‘தூள்’ ’சாமி’ ’கில்லி’ உள்பட பல திரைப்படங்களில் கேகே பாடினார். ‘கில்லி’ படத்தில் இவர் பாடிய ’அப்படி போடு’ என்ற பாடல் நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கொல்கத்தாவில் கல்லூரி கலாச்சார விழாவில் பங்கேற்க சென்ற கேகே, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தான் தங்கியிருந்த அறைக்கு சென்றபோது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாடகர் கேகே மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஒரே வாரத்தில் பாடகர் சித்துமூஸ் வாலா மற்றும் கேகே ஆகியோர்களின் மறைவு இசை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று கூறினார்.

கே கே பாடிய தமிழ் பாடல்களின் தொகுப்பு! 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.