close
Choose your channels

ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? கணவருடன் வித்தியாசமான கேம் விளையாடிய அமலாபால்..

Monday, January 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலாபால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? அல்லது இரட்டை குழந்தைகளா? என்ற விளையாட்டை தனது கணவருடன் விளையாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை அமலா பால் தனது நீண்ட நாள் நண்பரான தேசாய் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் கர்ப்பமானதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்தார். மேலும் கர்ப்பமாக இருக்கும் சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார் என்பதையும் நேற்று கூட அவர் கர்ப்ப நேரத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து அவர் தனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்ற விளையாட்டை விளையாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை நீங்களே கூறுங்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுள்ளார். சிலர் ஆண் குழந்தை என்றும் சிலர் பெண் குழந்தை என்றும் சிலர் இரட்டை குழந்தைகளை என்றும் இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் அமலாபால் பெண் குழந்தை பொம்மையின் அருகிலும் அவரது கணவர் ஆண் குழந்தையின் பொம்மையின் அருகிலும் நின்று எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.