close
Choose your channels

பிக்பாஸ் ரொம்ப மோசம்.. அர்ச்சனா மகளின் திடீர் விமர்சனத்தால் பரபரப்பு!

Saturday, September 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனாவின் மகள் சாரா திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சன் டிவியில் தனது தொலைக்காட்சியை வாழ்க்கையை தொடங்கி அதன் பின் பல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த அர்ச்சனா, ஜீடிவியில் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இந்த நிலையில் திடீரென ஜீடிவி சேனலில் இருந்து விலகி விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அர்ச்சனா என்றால் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரது இமேஜ் உடைந்தது. அன்பு கேங் என்று ஒரு குறிப்பிட்ட வட்டத்தை ஆரம்பித்துக்கொண்டு அதன் மூலம் ஆரி, பாலாஜி உள்பட பலரை அர்ச்சனா வெளியேற்ற திட்டமிட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கிட்டத்தட்ட ஜூலி அளவுக்கு அவர் ரசிகர்களால் வெறுக்கப்பட்டார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் விஜய் டிவியில் உள்ள ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது அவர் மீண்டும் விஜய் டிவியில் விருந்து விலகி ஜீடிவியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். விஜய் டிவியில் இருந்து அர்ச்சனா வெளியேறிய நிலையில் அர்ச்சனாவின் மகள் சாரா, தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் மோசம் என்றும் தனது தாயார் அர்ச்சனா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் தன்னுடைய அம்மாவின் கேரக்டரை முழுமையாக காட்டாமல் நெகட்டிவ் விஷயங்களை மட்டும் காட்டி அவருடைய பெயரை கெடுத்து விட்டதாகவும் கூறி உள்ளார்.

விஜய் டிவியில் இருந்து விலகிய ஒரு சில நாட்களில் அர்ச்சனா மகள் சாரா கூறியுள்ள இந்த கடும் விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.