close
Choose your channels

நடிகை ஆண்ட்ரியாவிற்குக் கிடைத்த புது கவுரவம்… வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

Wednesday, March 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாடகியாகவும் இருந்துவரும் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையாவிற்கு ஐக்கிய அரபு ஆமீரகத்தின் சார்பாக கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்துவருந்த ஆண்ட்ரியா நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான “பச்சைக்கிளி முத்துச்சரம்“ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான “ஆயிரத்தில் ஒருவன்“ திரைப்படம் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. இதனால் தொடர்ந்து “மங்காத்தா“, “விஸ்வரூபம்“, “தரமணி“, “வடசென்னை“, “துப்பறிவாளன்“ எனப் பல வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்வுசெய்து போல்டான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் நடிப்பைத் தவிர பின்னணி பாடகியாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் இவர் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரபல நிறுவனம் ஒன்று கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விசா மூலம் அந்நாட்டின் குடியுரிமை பெற்றவராக 10 வருடங்களுக்கு வாழ முடியும். தொடர்ந்து இந்த விசா புதுப்பித்துத் தரப்படும் என்பதும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

முன்னதாக UAE வழங்கிய கோல்டன் விசாவை தமிழ் சினிமாவில் நடிகர் பார்த்திபன், சிம்பு, நடிகை த்ரிஷா, அமலாபால், ராய் லட்சுமி, சமீபத்தில் விஜய்சேதுபதி, நடிகை மீனா போன்றோர் வாங்கியிருந்தனர். அந்த வரிசையில் நடிகை ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.