close
Choose your channels

அனுஷ்காவின் 41வது பிறந்த நாளில் 48வது பட அறிவிப்பு: போஸ்டர் ரிலீஸ்!

Monday, November 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபல நடிகை அனுஷ்கா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது 48வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லிங்கா’, விஜய் நடித்த ’வேட்டைக்காரன்’ அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ சூர்யா நடித்த ’சிங்கம்’ உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர் அனுஷ்கா என்பதும் இவர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’ திரைப்படம் இவரை உலக அளவில் பிரபலம் ஆக்கியது

இந்த நிலையில் இன்று நடிகை அனுஷ்கா தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் சற்று முன் அனுஷ்கா நடிக்கயிருக்கும் 48வது படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரது கேரக்டர் குறித்த போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த படத்துக்கு அனுஷ்கா, அன்விதா ரவாலிஷெட்டி என்ற குக்கிங் செஃப் கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.