close
Choose your channels

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படம் குறித்த அதிரடி தகவல்

Friday, September 20, 2019 • தமிழ் Comments

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் நடித்து வரும் ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் ஹீரோ யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் ஏஆர் முருகதாஸ் அவர்களிடம் இருந்து ஒரு அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து ஏஆர் முருகதாஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பாகத்தான் அந்த அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு பரவி வருகிறது. ஏஆர் முருகதாஸின் அடுத்த படத்தில் தல அஜீத் நடிக்க இருப்பதாக அஜித் ரசிகர்களும், விஜய்யின் ’துப்பாக்கி 2’ திரைப்படம் தான் அவருடைய அடுத்த படமாக இருக்கும் என விஜய் ரசிகர்களும் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படத்தின் ஹீரோ யாராக இருக்கும் என்று என்று உங்களுக்கு தோன்றுவதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

Get Breaking News Alerts From IndiaGlitz