close
Choose your channels

'தளபதி 63': தெறிக்க விட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் அப்டேட்

Wednesday, June 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியபோதிலும் இன்னும் அந்த படத்தின் அதிகாரபூர்வ அப்டேட் எதுவும் வராததால் விஜய் ரசிககர்கள் அதிருப்தியில் உள்ளனர். விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்கிற அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்,

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடி டுவீட்டுக்களை பதிவு செய்து வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்டை தந்துள்ளார். 'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்கள் பணி முடிந்துவிட்டதாகவும், இந்த பாடல்களை திரையில் பார்த்த முதல் நபர் நான் தான் என்றும் அப்டேட் செய்து ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் உள்ள திரையில் 'தளபதி 63' முதல் பாடல் எடிட் என்ற வார்த்தையும் அருகில் அட்லியும் உள்ளார். இந்த அப்டேட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

'தளபதி 63' படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் என்று கூறப்பட்ட நிலையில் அவற்றின் இரண்டு பாடல்களின் பணி முழுவதுமாக முடிந்துவிட்டதால் விரைவில் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.