close
Choose your channels

ஹாலிவுட்டிலும் திரைப்படம் தயாரிப்பேன்:  ஏ.ஆர்.ரஹ்மான்

Friday, April 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் திரைப்படம் தயாரிப்பேன் என ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்

ஏஆர் ரஹ்மான் அவர்கள் தயாரிப்பில் உருவான ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. தமிழ் ஹிந்தி உள்பட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் அவர்கள் ஹாலிவுட்டிலும் படம் தயாரிப்பேன் என்று கூறியுள்ளார். இசை குறித்த கதை என்பதால் ’99 சாங்ஸ்’ கதையை தேர்ந்தெடுத்தேன் என்றும் இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து ஹாலிவுட்டிலும் திரைப்படம் தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ஏஆர் ரஹ்மான் இசையமைத்து கதை எழுதி தயாரித்துள்ள ‘99 சாங்ஸ்’ திரைப்படத்தை நேற்றிரவு சிறப்பு காட்சியை பார்த்த பிரபலங்கள் பலர் பாசிட்டிவ் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.