close
Choose your channels

கீபோர்டு கலைஞருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த மரியாதை!

Monday, November 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன்னிடம் பல வருடங்கள் கீபோர்டு வாசித்த கலைஞருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் செய்த மரியாதையை கோலிவுட் திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களிடம் பல வருடங்கள் கீபோர்டு வாசித்து வந்தவர் தாஜ் நூர். பின்னர் இவர் திரையுலகில் ‘வம்சம்’, என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகி ‘ஸ்ட்ராபெர்ரி, ‘நையப்புடை’ போன்ற படங்களுக்கு இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தாஜ் நூர் மகள் சுமையா திருமணம் நேற்று சென்னை அடையாறு பகுதியில் சிறப்பாக நடந்தது. இந்த திருமணத்தில் முதல் நபராக வந்த ஏ.ஆர்.ரஹ்மான் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் முடியும் வரை இருந்து மணமக்களை அவர் வாழ்த்தி, தன்னிடம் பணிபுரிந்த தாஜ் நூருக்கு உரிய மரியாதையை அளித்தார்.

இந்த திருமணத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி எஸ்.தாணு, சிவகுமார், டி.இமான், ஆரி, ரோபோ சங்கர், அமீர் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.