close
Choose your channels

அரபு நாட்டில் இருந்து 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனம் ஆடிய பிரபலம்!

Sunday, February 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’அரபிக்குத்து’ என்ற பாடல் வெளியானது. அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி குரலில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் உருவான இந்தப் பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பாக சமந்தா உள்பட பல திரையுலக பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடி தங்களது சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு வரும் நிலையில் அந்த வீடியோக்களும் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சின்னத்திரை பிரபலமான டிடி என்ற திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’அரபிக்குத்து’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவு செய்து உள்ளார். அவர் இந்தப் பாடலுக்கு நடனமாடிய இடம் அரபு நாடு என்பதுதான் இதில் முக்கிய விசேஷம்

இந்தப் பதிவின் கேப்ஷனாக, ‘நம்ம சமந்தா அளவுக்கு இல்ல, பூஜா ஹெக்டே அளவுக்கு கிடையாது. ஆனால் அரபு நாட்டிலிருந்து எப்படி ’அரபிக்குத்து’ பாடலுக்கு நடனம் ஆடாமல் இருக்க முடியும்? அதான் ஒரு சின்ன முயற்சி’ என்று அவர் பதிவு செய்துள்ளார். டிடி பதிவு செய்துள்ள இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.