close
Choose your channels

'அரபிக்குத்து' பாட்டு படத்தில் இல்லையா? அதிருப்தியில் விஜய் ரசிகர்கள்!

Sunday, February 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ’அரபிக்குத்து’ பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த பாடல் அனிருத் புரமோவில் சொன்னது போல் உண்மையிலேயே பான் - வேர்ல்ட் பாடலாக உலக அளவில் ஹிட்டாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’அரபிக்குத்து’ பாடல் படத்தின் இடையே இல்லை என்றும் படம் முடிவடைந்தவுடன் டைட்டில் போடும் போது தான் இந்த பாடல் இடம்பெறுவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

ஏற்கனவே நெல்சன் இயக்கிய ’டாக்டர்’ படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ’செல்லம்மா’ பாடலும் படம் முடிந்தவுடன் டைட்டிலில் தன் இடம்பெற்றது என்பது தெரிந்ததே. அதேபோல்தான் ’அரபிக்குத்து’ பாடலும் படத்தில் இடம்பெறும் என்ற தகவல் ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

உலக அளவில் ஹிட்டான இந்த பாடல் படத்தின் இடையில் இருந்தால் தியேட்டரில் ரசிகர்கள் குஷியாக இருப்பார்கள் என்றும், படம் முடிந்தபின்னர் கடைசியில் வருவது குறித்து தங்களுக்கு அதிருப்திதான் என்றும் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த பாடல் எந்த இடத்தில் வரும் என்பதை படம் ரிலீஸான பிறகு பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.