close
Choose your channels

அரவிந்த் சாமியின் மகன், மகள் என்ன படிப்பு படித்திருக்கிறார்கள் தெரியுமா? லேட்டஸ்ட் புகைப்படம்

Friday, November 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் அழகான நடிகர்களில் ஒருவரான அரவிந்த்சாமியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’தளபதி’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அதன்பின்னர் ’ரோஜா’ என்ற திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய புகழ் பெற்ற அரவிந்த்சாமி பல திரைப்படங்களில் நடித்தார். இடையில் சில ஆண்டுகள் நடிப்பிலிருந்து விலகி இருந்த அரவிந்த்சாமி அதன் பின்னர் மீண்டும் ’தனி ஒருவன்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரவிந்த் சாமி நடிப்பில் ’நரகாசுரன்’ ’கள்ளபார்ட்’ ’சதுரங்க வேட்டை 2’ ‘வணங்காமுடி’ ஆகிய படங்கள் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் நடிகர் அரவிந்த்சாமி கடந்த 1994ஆம் ஆண்டு காயத்ரி ராமமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆதிரா என்ற மகளும் ருத்ரா என்ற மகனும் உள்ளனர். அரவிந்த்சாமி தனது மனைவியை கடந்த 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின் 2012ஆம் ஆண்டு அபர்ணா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அரவிந்த் சாமியின் மகள் ஆதிரா சமையல் கலை வல்லுனராகி மிகப்பெரிய செஃப் ஆக உள்ளார். அதேபோல் அரவிந்த்சாமி மகன் ருத்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ’ஐபி என்ற இண்டர்நேஷனல் பேக்கலரேட் படிப்பை முடித்தார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான அரவிந்த்சாமியின் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.