close
Choose your channels

அனிதா தந்தைக்கு இறுதி மரியாதை செய்த பிக்பாஸ் பிரபலங்கள்

Wednesday, December 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த அனிதா கடந்த ஞாயிறு அன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் வெளியேறிய இரண்டாவது நாளே அனிதாவின் தந்தை சம்பத் அவர்கள் எதிர்பாராத வகையில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

இந்தநிலையில் அனிதாவுக்கு அவரது ரசிகர்கள் பலரும் ஆறுதல் மற்றும் இரங்கல் கூறி வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் அனிதாவின் சக போட்டியாளர்களாக இருந்த அர்ச்சனா மற்றும் நிஷா ஆகிய இருவரும் அனிதாவின் வீட்டிற்கு சென்று அவருடைய தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர். மேலும் அனிதாவை அவர்கள் இருவரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

பிக்பாஸ் வீட்டில் அனிதாவுடன் பல நேரங்களில் அர்ச்சனாவும் நிஷாவும் சண்டை போட்டுக் கொண்டாலும் வெளியே வந்தவுடன் மனிதத் தன்மையுடனும், உண்மையான அன்புடனும் நடந்து கொண்டிருப்பது இந்த செயலின்  மூலம் தெரிய வருகிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.