close
Choose your channels

விஜய் படம் பார்க்க மணிக்கணக்கில் டிக்கெட் கவுண்டரில் காத்திருந்தேன்: 'மாஸ்டர்' நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு

Wednesday, January 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ் தனது சமூக வலைத்தளத்தில் நெகழ்ச்சியான ஒரு பதிவை பதிவு செய்து உள்ளார்.

தளபதி விஜய்யின் திரைப்படத்தை பார்ப்பதற்காக மணிக்கணக்கில் டிக்கெட் கவுண்டரில் காத்திருந்த நான், இன்று அவருடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்திருப்பதை என்னால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. இதற்காக நான் விஜய் அவர்களுக்கும் விஜய் சேதுபதி அவர்களுக்கும் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கும் பிரிட்டோ அவர்களுக்கும் ஜெகதீஸ் அவர்களுக்கும் அனைத்து படக்குழுவினர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

என்னுடைய கனவு நனவாக மேற்கண்ட அனைவரும் எனக்கு உதவி செய்துள்ளார்கள். மேலும் இதே டீமிடம் நான் மீண்டும் இணைந்து பணி செய்வேன் என்று நம்புகிறேன். லோகேஷ் அவர்களுக்கு நான் ஸ்பெஷல் நன்றி சொல்ல வேண்டும். அவர் தான் எனக்கு உண்மையான மாஸ்டர் என்று கூறியுள்ளார்.

மேலும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை அனைவரும் பாதுகாப்பாக மாஸ்க் அணிந்து தனிமனித இடைவேளையை கடைபிடித்து பார்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.