close
Choose your channels

ரஜினியுடன் கூட்டணி சேர கமலுக்கு நிபந்தனை விதித்த பிரபலம்!

Tuesday, March 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் ’வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரஜினி கட்சி ஆட்சி பொறுப்புக்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் ரஜினியின் ஆன்மீக அரசியல் வெற்றி பெறுவது உறுதி என்றும் கூறினார்

மேலும் ’ரஜினிகாந்தை முதல்வராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே கமல்ஹாசனின் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். முதல்வர் பதவி யாருக்கு என்பது குறித்து ரஜினி, கமல் ஆகிய இருவருமே எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காத நிலையில் அர்ஜூன் சம்பந்த் கூறிய இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.