close
Choose your channels

'எந்திரன் 2' படத்தின் வில்லனாகும் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்?

Tuesday, October 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் 'எந்திரன் 2'. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பலம் வாய்ந்த வில்லன் நடிகரை கடந்த சில மாதங்களாக இயக்குனர் ஷங்கர் தேடி வந்தார். கமல்ஹாசன், அமீர்கான், விக்ரம் ஆகியோர் இந்த வேடத்திற்கு பரிசீலிக்கப்பட்ட நிலையில் இறுதியில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் அவர்களிடம் கடந்த சில நாட்களாக ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக செய்திகள் வெளிவந்தது என்பதை அனைவரும் அறிவோம்.

இந்நிலையில் 'எந்திரன் 2' படத்தில் அர்னால்ட் நடிப்பது உறுதியாகிவிட்டதாகவும், இந்த படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ.100 கோடி சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

ரஜினிகாந்த், அர்னாட்ல், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற உலகப்புகழ் பெற்ற கலைஞர்கள் இணையும் இந்த படத்தை 'கத்தி' படத்தை தயாரித்த லைகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.