close
Choose your channels

'தூக்கி போட்டு மிதிப்பான்': அருண்விஜய்யின் 'யானை' கிளிம்ப்ஸ் வீடியோ

Wednesday, June 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யானை’ திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் சற்று முன் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அருண் விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் இந்த ஒரு நிமிட வீடியோ ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது என்பதும் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக ’தூக்கி போட்டு மிதிப்பான்’ என்ற வசனமும், ‘ஏன் அடிச்சான் எதுக்கு அடிச்சன்னே தெரிய கூடாது என்ற வசனமும், என்வீட்ல உள்ளவங்களுக்கு குன்றுமணி அளவுக்கு ஆபத்து வந்தால் உன் குலத்தையே கருவறுத்துட்டு போய்கிட்டே இருப்பேன்’ என்ற ஆவேசமான வசனங்களும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

அருண்விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, அம்மு அபிராமி, கேஜிஎப் ராமச்சந்திரா, ராதிகா சரத்குமார், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், சஞ்சீவ், புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos