close
Choose your channels

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? முதல் படம் போல் இருக்குமா?

Saturday, March 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அருண் விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

அருண் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளவர் இயக்குனர் பிரபு ஜெயராம். இவர் ஏற்கனவே ’என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பதும் அந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படத்திலேயே ஒரு சர்ச்சைக்குரிய கதையை தேர்வு செய்து அனுபவமிக்க இயக்குனர்களே தயக்கம் காட்டும் கதையை தேர்வு செய்து நியாயமான கேள்விகளை சமரசம் இன்றி அந்த படத்தில் அவர் கேட்டிருப்பார். இட ஒதுக்கீட்டை செல்வாக்கு உள்ளவர்களால் மட்டும் எப்படி தங்களுக்கு சாதகமாக மாற்ற முடியும் ? மனித நேயம் அன்பு என்பது பிரதானமாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக அந்த படத்தில் பதிவு செய்திருப்பார்.

இந்த நிலையில் தான் அருண் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பிரபு ஜெயராம் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் படம் மாதிரியே இரண்டாவது படத்திலும் ஒரு சமூக பிரச்சனையை மிகவும் அழுத்தமாக இயக்குனர் பிரபு ஜெயராம் கூறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.