close
Choose your channels

சூப்பர்ஹிட் பட இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆர்யா: டைட்டில் அறிவிப்பு!

Thursday, November 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா நடித்த புதிய படத்தின் டைட்டில் சற்றுமுன் வெளியாகியுள்ளதை அடுத்து அந்த டைட்டில் போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ மற்றும் ’எனிமி’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஆர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் சற்று முன் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘டெடி’ என்ற படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் மீண்டும் ஆர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு ’கேப்டன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஆர்யாவுடன், சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, காவ்யா ஷெட்டி உள்பட பலர் நடிக்க உள்ளனர். டி. இமான் இசையமைப்பில் மதன்கார்க்கி பாடல் வரிகளில் யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.