close
Choose your channels

வரலட்சுமியின் அடுத்த படத்தை புரமோஷன் செய்யும் ஆர்யா!

Tuesday, June 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய வரலட்சுமி ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒரு படம் 'கன்னித்தீவு'. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணியை படக்குழுவினர் தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் இன்று மாலை 6 மணிக்கு 'கன்னித்தீவு' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

வரலட்சுமியுடன் பிக்பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா ஜாவேரி மற்றும் சுபிக்சா என நான்கு பிரபல நடிகைகள் நடிக்கும் இந்த படத்தை சுந்தர் பாலு என்பவர் தயாரித்து வருகிறார். அரோல் கரோலி இசையில் சிட்டிபாபு ஒளிப்பதிவில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.