close
Choose your channels

அட்லியின் அடுத்த படத்தில் இடம்பெற்ற 'மாஸ்டர்' வசனம்!

Tuesday, April 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லி தயாரிப்பில் உருவாகிய படத்தின் டைட்டில் ‘அந்தகாரம்’ என்றும், இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் அட்லி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘அந்தகாரம்’ படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். 2.43 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

விக்னேஷ் ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலரில் ஒரு மனோதத்துவ நிபுணர் தனது எதிரில் இருப்பவரிடம் புலி கதை ஒன்றை கூறுகிறார். ‘புலி கூண்டிற்குள் நீ இருந்தால் அந்த புலிக்கு நீ எப்படி தெரிவாய்? என்ற கேள்விக்கு பதில் கூற முடியாமல் திணறும் நபர், ’அந்த கூண்டுக்குள் நீங்கள் இருந்தால் அந்த புலிக்கு நீங்கள் எப்படி தெரிவீர்கள்? என்று கேட்க அதற்கு அந்த மனோதத்துவ நிபுணர் ‘மாஸ்டர்’ என்று பதில் கூறுகிறார். புலியின் கூண்டிற்குள் மனிதன் இருந்தால் அந்த புலிக்கு மனிதன் இரையாகத்தான் தெரிவான் என்று அனைவரும் நினைக்கும் நிலையில் திடீரென அந்த டாக்டர் ‘மாஸ்டர்’ என்று கூறியதே, படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அதேபோல் பார்வையற்ற மாற்று திறனாளியை பிடிக்க ஒரு குரூப் தேடி அலைவதும், அந்த மாற்றுத்திறனாளி அவர்கள் கண்ணில் விரல்விட்டு ஆட்டுவிக்கும் காட்சிகளும் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் பூஜா ராமச்சந்திரன், குமார் நடராஜன், மீஷா கோஷல், ஜீவா ரவி,உள்பட பலர் நடித்துள்ளனர். பிரதீப் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும், கொரோனா பிரச்சனை முடிந்ததும் இந்த படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.