close
Choose your channels

'தளபதி 67' படத்தை இயக்குவது அட்லியா? லோகேஷ் கனகராஜா?

Saturday, March 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் இயக்கிய நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 14 அன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில் ’தளபதி 66 ’திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 67’ படம் குறித்த தகவல்களும் அவ்வப்போது கசிந்து வருகின்றன. ’தளபதி 67’ திரைப்படத்தை அட்லி இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதே சமயத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் படத்தை இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பின் இடையே ’தளபதி 67’ படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது .

பொதுவாக ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்த பின்னர்தான் அடுத்த படத்தின் அறிவிப்பை விஜய் வெளியிடுவார். ஆனால் ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்காத நிலையில் ’தளபதி 67’ படம் குறித்த தகவல்கள் அனைத்தும் ஊகங்களின் அடிப்படையானது என்றும் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.