close
Choose your channels

'பிகில்' படப்பிடிப்பில் கலந்து கொண்ட அட்லியின் மனைவி!

Friday, August 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை வந்து விட்டது என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் விஜய் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மற்ற பகுதிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அனேகமாக இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று தெரிகிறது

இந்த நிலையில் சென்னையில் கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளாக ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் நடித்து வரும் காட்சியின் படப்பிடிபை அட்லீ நடத்தினார். இந்த படப்பிடிப்பின் இடையே அட்லியின் மனைவி ப்ரியா வருகை தந்து ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் நடிகைகளுக்கு ஊக்கமளித்ததோடு அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பின் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.