close
Choose your channels

சமந்தாவின் அடுத்த படத்தில் லிப்லாக், படுக்கையறை காட்சிகள்..? 'சாகுந்தலம்' தோல்வியில் இருந்து மீள்வாரா?

Saturday, May 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமந்தா நடித்த ’சாகுந்தலம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தோல்வி அடைந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் வெப் தொடரில் படுக்கையறை காட்சிகள் மற்றும் லிப் கிஸ் காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் ’சாகுந்தலம்’ தோல்வியில் இருந்து அவர் மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட்டில் உருவாகி வரும் ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார் என்பதும் இந்த தொடரில் படுக்கையறை காட்சிகள், லிப் லாக் காட்சிகள் மற்றும் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அமேசான் பிரைமில் புதிய எபிசோடுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த தொடரின் ஹிந்தி ரீமேக் தற்போது உருவாகி வருகிறது என்பதும் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் இந்த வெப் தொடரில் பிரியங்கா சோப்ரா கேரக்டரில் நடிகை சமந்தா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்து வருகிறார்.

ஒரிஜினல் ’சிட்டாடல்’ தொடரில் இருப்பது போலவே ஹிந்தி ரீமேக் ’சிட்டாடல்’ வெப் தொடரில் லிப் லாக் காட்சி, படுக்கையறை காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களுக்கு இந்த வெப் தொடர் செம்ம விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் ’குஷி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படமும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos