close
Choose your channels

மழலை பள்ளியாக மாறிய பிக்பாஸ் வீடு.. வேற லெவலில் மைனா ஃபெர்மான்ஸ்!

Tuesday, December 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 71 நாட்கள் முடிவடைந்து இன்று 72வது நாள் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டதில் அதில் 10 போட்டியாளர்கள் இதுவரை எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் ஜிபி முத்து என்ற போட்டியாளர் தானாகவே வெளியேறி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த வார கேப்டனாக மணிகண்டன் செயல்பட்டு வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் மழலையர் பள்ளி ஆக பிக்பாஸ் வீடு மாறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீடு பிபி ஆரம்பப் பள்ளியாக மாறப் போவதாகவும் மாணவர்கள் மழலை மொழியில் அனைத்து உதவிகளும் ஆசிரியர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தியும், மாணவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விக்ரமன், அசீம், அமுதவாணன் ஆகியோர் ஆசிரியர்களாகவும், மைனா, ஏடிகே, ஷிவின், ரக்சிதா, மணிகண்டன், கதிரவன் உள்ளிட்டோர் மாணவ-மாணவிகளாகவும் நடிக்கின்றனர்.

சற்றுமுன் வெளியான முதல் புரமோவில் மைனா நந்தினி மாணவியாக வேற லெவலில் மழலை குரலில் பேசுவது இன்றைய நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.