close
Choose your channels

பள்ளியை அடுத்து கல்லூரியாக மாறிய பிக்பாஸ் வீடு.. மாணவ மாணவிகள் யார் யார்?

Thursday, December 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் 74வது நாளான இன்றைய முதல் புரமோன் வீடியோவில் பிக்பாஸ் வீடு கலைக்கல்லூரி ஆக மாறப்போகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீடு மழலையர் பள்ளியாக இருந்த நிலையில் மாணவ மாணவிகளின் சேட்டை, ஆசிரியர்களின் கண்டிப்பு சுவாரஸ்யமாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீடு ‘இந்திரன் சந்திரன்’ என்ற கலைக்கல்லூரியாக மாறியிருக்கும் நிலையில் கடந்த 1980களில் உள்ள கல்லூரி மாணவர்களாக போட்டியாளர்கள் நடிக்கின்றனர்.

விக்ரமன் சைக்காலஜி பேராசிரியராகவும் மணிகண்டன் நடன ஆசிரியராகவும் நடிக்கின்றனர். இதனையடுத்து மாணவ மாணவிகளாக ரக்சிதா, தனலட்சுமி, அசீம், அமுதவாணன், கதிரவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். பள்ளி டாஸ்க்கை விட இந்த கல்லூரி டாஸ்க் கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.