close
Choose your channels

இந்த சீசனின் கடைசி எவிக்சன் இவரா? பிக்பாஸில் செம டுவிஸ்ட்!

Saturday, January 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 97வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வாரம் கிராண்ட் பினாலெ நடைபெற உள்ளது என்பதும் அதில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீசனின் கடைசி எவிக்சன் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. கிராண்ட் பினாலேவுக்கு தகுதி பெற்ற அமுதவாணன் தவிர மற்ற போட்டியாளர்கள் இந்த வார நாமினேஷனில் இருந்த நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேறுபவர் ஏடிகே என தெரிய வந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சூப்பராக ஏடிகே விளையாடி வந்ததால் அவர் நிச்சயம் கிராண்ட் பினாலே போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இன்று எவிக்சன் செய்யப்பட்டிருப்பது செம டிவிஸ்ட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமுதவாணன் தவிர மீதமுள்ள விக்ரமன், ஷிவின், மைனா, அசீம், கதிரவன் ஆகியோர்களில் யார் யார் கிராண்ட் பினாலேவுக்கு தகுதி பெற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.