close
Choose your channels

பிக்பாஸ் ஷிவின் திருநங்கை ஆகும் முன் எடுத்த புகைப்படமா இது?

Thursday, December 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவின் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதும் 70 நாட்கள் கடந்த நிலையில் விக்ரமனுக்கு இணையாக ஷிவினும் இந்த சீசனின் டைட்டில் பட்டம் பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷிவின் பிக்பாஸ் மூலம் பிரபலமானதை அடுத்து அவருடைய பழைய புகைப்படங்களையும் நெட்டிசன்கள் தேடி கண்டுபிடித்து இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் ஷிவின் திருநங்கை ஆவதற்கு முன் இருந்த குடும்ப புகைப்படம் ஒன்று என ஒரு புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஆரம்ப காலத்தில் ஷிவின் திருநங்கையான போது தனது வீட்டில் ஆதரவு கிடைக்கவில்லை என்றும் அதனை அடுத்து அவர் சிங்கப்பூர் சென்று பின்னர் இந்தியா திரும்பிய அவர் மாடலிங் தொழிலில் ஈடுபட்டார் என்பதும் அதன் பிறகுதான் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அம்மா அப்பாவுடன் திருநங்கை ஆவதற்கு முன் ஷிவின் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வந்தாலும் இந்த புகைப்படத்தில் இருப்பது ஷிவின் தான் என்பதை அவரது குடும்பத்தில் இருந்து யாரும் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.