close
Choose your channels

முதல்முறையாக அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லைக்கு ஆளான பிக்பாஸ் நடிகர்.. முன்னணி நடிகை மீது குற்றச்சாட்டு..!

Wednesday, March 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹாலிவுட் திரையுலகம் முதல் கோலிவுட் திரை உலகம் வரை நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் என்ற தொல்லைக்கு ஆளாவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன என்பதும் அதுமட்டுமின்றி சீரியல் நடிகைகளுக்கு கூட இந்த பிரச்சனை எழுந்துள்ளது என வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்து வருகிறோம். இந்த நிலையில் முதல் முறையாக நடிகர் ஒருவர் முன்னணி நடிகையால் அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லைக்கு ஆளானதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் மற்றும் போஜ்புரி நடிகர் ரவிகிஷன். இவர் சுமார் நூற்றுக்கும் மேற்கண்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் பாலிவுட் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத் மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில் நடிகர் ரவிகிஷன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய ஆரம்ப காலத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் நாயகி தனக்கு அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை கொடுத்ததாகவும் நான் அதிர்ச்சி அடைந்து மறுத்து விட்டேன் என்று கூறியுள்ளார். அந்த நடிகையின் ஆசைக்கு இணங்காததால் அந்த படத்தில் இருந்து நான் நீக்கப்பட்டேன்’ என்றும் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அந்த நடிகை யார் என்பதை தான் சொல்ல விரும்பவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தற்போது அவர் ஒரு பிரபலமான நடிகையாக உள்ளார் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அந்த நடிகை யாராக இருக்கும் என இணையத்தில் வலைவீசி தேட ஆரம்பித்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.