close
Choose your channels

பிக்பாஸ் பணம் வந்தவுடன் தனலட்சுமி செய்த முதல் வேலை என்ன தெரியுமா? வைரல் புகைப்படம்..!

Thursday, June 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமிக்கு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பணம் கிடைத்துள்ள நிலையில் அந்த பணத்திலிருந்து புதிய கார் வாங்கியுள்ளதாக தெரிகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் தனலட்சுமி.

இவர் பொதுமக்கள் என்ற அடையாளத்துடன் களமிறங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலக்கினார் என்பதும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றதற்கு இவரும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அசிம் மற்றும் தனலட்சுமி அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டது பிக் பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் 70 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்து இருந்த தனலட்சுமிக்கு ரூ.11 லட்சத்துக்கு மேல் சம்பளம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பள பணம் தற்போது வந்துள்ள நிலையில் அதில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை தனலட்சுமி வாங்கியுள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.