close
Choose your channels

'குக் வித் கோமாளி' ஓட்டேரி சிவா அருகில் மாலையும் கழுத்துமாக பிக்பாஸ் ஜனனி.. என்ன விசேஷம்?

Sunday, May 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் ஜனனி தனது சமூக வலைத்தளத்தில் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் ஜனனி கலந்து கொண்டார் என்பதும் அவர் 70 நாட்கள் வரை தாக்குப்பிடித்து இந்த நிகழ்ச்சியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூக வலைதளங்களில் பிரபலமான அவருக்கு ஏராளமான ஃபாலோயர்கள் கிடைத்தனர். அதுமட்டுமின்றி தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’லியோ’ திரைப்படத்தில் அவர் ஒரு கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென ஜனனி தனது சமூக வலைத்தளத்தில் கோவிலில் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் அவரது அருகில் மாலையும் கழுத்துமாக இருந்த இளைஞர் யார்? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பினர்.

இந்த நிலையில் இந்த புகைப்படம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இது ஒரு ஆல்பம் படப்பிடிப்பின் பூஜை என்றும் இந்த ஆல்பத்தில் தன்னுடன் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட ஓட்டேரி சிவாவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஜனனியின் ஆல்பம் வெற்றி பெற அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.