close
Choose your channels

மீம் கிரியேட்டர்ஸ்களை கூவிக்கூவி அழைத்த பிக்பாஸ் கமல்!

Saturday, June 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சி நேயர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கவுள்ளது. மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் மதுமிதா, ஃபாத்திமா பாபு, வனிதா விஜய்குமார், அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் மோகன் வைத்யா உள்பட மொத்தம் 15 பேர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சற்றுமுன் வெளியான வீடியோ ஒன்றில் பிக்பாஸை அழைக்கும் கமல், மீம்ஸ் கிரியேட்டர்ஸ்கள் தயாராக இருக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டாலே அந்த 100 நாட்களிலும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்கள் பிசியாக இருப்பார்கள் என்பதை குறிப்பிடும் வகையில் கமல், அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் விஜய் டிவியின் இன்னொரு டுவீட்டில் கமல்ஹாசன் ஒரு அட்டகாசமான இருக்கையில் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் உள்ளது. அது அனேகமாக கன்ஃபக்சென் அறையில் உள்ள இருக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் எண்ட்ரிக்கு பின் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் நெடி அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.