close
Choose your channels

வெறும் சட்டை மட்டும் தான் காஸ்ட்யூம். பிக்பாஸ் மதுமிதாவின் இன்ப அதிர்ச்சி போட்டோஷூட்..!

Sunday, February 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களில் வெறும் சட்டை மட்டும் அணிந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழரான மதுமிதா, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அவர் 42 நாட்கள் விளையாடி அதன்பின் எவிக்சன் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறைந்த நாட்களே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் அவருடைய சமூக வலைதளத்தில் ஃபாலோயர்கள் இருமடங்கு அதிகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மதுமிதா வெளியிட்டு வந்தார். குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றபோது அவர் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை மதுமிதா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதில் ஒரே ஒரு சட்டை மட்டுமே அணிந்து, அதிலும் மேலே சில பட்டன்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் ரசிகர்கள் அதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் இந்த புகைப்படங்களை பதிவு செய்த சில மணி நேரங்களில் ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.