close
Choose your channels

உள்ளேயும் முகமூடி விழ ஆரம்பிச்சிருச்சு: கமல்ஹாசன்

Saturday, October 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 முதல் நாளிலிருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று கமலஹாசன் தோன்றும் நாள் என்பதால் காரசாரமான விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் ’உள்ளேயும் முகமூடிகள் தெரிய ஆரம்பித்து விட்டது. பார்க்க பெரிய வில்லனோட அடியாள் மாதிரி இருக்கின்றாரே, பேச்சும் ஒரு மாதிரி இருக்கிறதே, நல்லவரா? என்று சந்தேகப்பட்டோம். ஆனால் நிஜ முகம் தெரிய ஆரம்பித்தவுடன் நல்லவர் மாதிரி தான் தோணுது ,ஹீரோவாகவே மாறி விடுவார் போலிருக்கிறதே. அப்ப நாம நல்லவங்கன்னு நெனச்சுக்கிட்டு இருந்தவங்க எல்லாம்... என்று கூறி கமல்ஹாசன் நிறுத்தியுள்ளார்.

எனவே இன்றைய நிகழ்ச்சியில் ஹீரோவாக மாறுபவர்கள் யார்? என்பதையும் நல்லவர்களாக நினைத்தவர்கள் யார் என்பதையும் அவர் கோடிட்டு காட்ட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.