close
Choose your channels

விஜய் டிவி பிரபலங்களுடன் தீபாவளி கொண்டாடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

Thursday, November 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தீபாவளி கொண்டாட்டம் நடக்கும் காட்சிகள் முதல் புரமோவில் உள்ளன.

குறிப்பாக விஜய் டிவி பிரபலங்களான மாகாபா, பாலா, மதுரை முத்து மற்றும் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் உள்பட பலரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் அவர்களுடன் ஆட்டம் பாட்டம் கலைநிகழ்ச்சிகளுடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் இன்று தீபாவளி கொண்டாட்டம் செய்யும் காட்சிகள் கோலாகலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பட்டிமன்றமும் நடக்கிறது. அதில் பிக் பாஸ் வீட்டுக்குள் சிறந்தவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற பட்டிமன்றத்தில் சூடான விவாதமும் நடைபெறுகிறது. மொத்தத்தில் இன்று இரவு 7 மணி முதல் பிக்பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற உள்ளதால் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.