close
Choose your channels

திடீரென வேலை செய்ய மறுக்கும் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள்.. முற்றும் பகை.. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

Thursday, October 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் ஸ்மால் ஹவுஸ் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் சரியாக விளையாடாத பிக்பாஸ் போட்டியாளர்கள் தண்டனையாக அந்த ஸ்மால் ஹவுஸ்க்கு அனுப்பப்படுகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

மேலும் ஸ்மால் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் தான் சமையல் செய்ய வேண்டும், வீட்டை சுத்தப்படுத்த வேண்டும், பாத்ரூம் கிளீன் பண்ண வேண்டும் என்ற நிலை இருப்பதால் ஸ்மால் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் பிக் ஹவுஸில் இருக்கும் போட்டியாளருக்கும் இடையே ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் பகையும் வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில் பிக் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் தேவையான மெனுவை ஒரு போர்டில் எழுதி வைத்திருக்க, அதைக்கண்டு கடுப்பாகும் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் சமையல் செய்ய முடியாது என்று வேலை செய்ய மறுக்கின்றனர். இதனால் பிக் ஹவுஸ், ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களுக்கு இடையே மோதல் முற்றுகிறது.

பிக் ஹவுஸில் இருப்பவர்கள் சமையல் வேலை செய்யக்கூடாது என்ற விதி இருக்கும் நிலையில், ஸ்மால் ஹவுஸில் இருப்பவர்கள் சமையல் செய்ய முடியாது என்று கூறப்படும் நிலையில் இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.