close
Choose your channels

பாம்பு, கீரியாக மாறும் பிக்பாஸ் வீடு!

Tuesday, July 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் டாஸ்க் என்ற பெயரில் நடக்கும் கூத்துக்கள் சில சமயம் சுவாரசியமாக இருந்தாலும் பல சமயம் எரிச்சலையே தரும் வகையிலேயே இருக்கும். அந்த வகையில் சற்றுமுன் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் கிராமத்து டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

பிக்பாஸ் வீடு இரண்டு கிராமாக பிரிவதாகவும், அதாவது பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என இரண்டு கிராமங்களாக பிரிவதாகவும், இந்த கிராமங்களில் போட்டியாளர்கள் சம அளவில் கிராமங்களை பகிர்ந்து கொள்வார்கள். இதில் ஒரு பாம்புப்பட்டி கிராமத்தினர் உணவு அருந்த வேண்டும் என்றால் கீரிப்பட்டி கிராமத்தினர் கொடுக்கும் டாஸ்க்கை செயல்படுத்த வேண்டும். அப்படி செயல்படுத்தினால்தான் உணவு உண்டு.

இந்த டாஸ்க்கின் போது மீராவின் தோளில் சரவணன் கைபோடுவது, ரேஷ்மா, அபிராமி தோப்புக்கரணம் போடுவது, சாக்சிக்கு தர்ஷன் சாப்பாடு ஊட்டுவது போன்ற கூத்துக்கள் நடக்கின்றன. இந்த டாஸ்க்கிலாவது மீரா பிரச்சனை ஏதும் செய்யாமல் இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.