close
Choose your channels

ஒரு பெரிய டெஸ்ட்டில் ஜெயிச்சுருக்கிங்க: கமலிடம் பாராட்டு பெற்ற போட்டியாளர்!

Sunday, November 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இன்று 50 நாள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று போட்டியாளர்களிடம் கமலஹாசன் அது குறித்து பேசி வருகிறார். அந்த வகையில் சோம், கமலஹாசனிடம் பேசியபோது அவர் நெகழ்ச்சியுடன் தன்னைப் பற்றி கூறுகிறார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் என்னை பற்றி யாருக்கும் தெரியாது. இப்பொழுதுதான் ஓரளவு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய பாக்ஸிங் திறமை குறித்தும் காமெடி சென்ஸ் குறித்தும் நான் பேசும் போது சில விஷயங்களை என்னை தடுக்கும் என்று அவர் நெகழ்ச்சியுடன் கூறும்போது ’நீங்கள் நன்றாக பேசினீர்கள் என்று பாராட்டிய கமலஹாசன் ஒரு பெரிய டெஸ்டில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்றும் கூறினார்.

நீங்கள் இன்னும் பொறுமையாக காத்திருங்கள் உங்களுக்கு இன்னும் வெற்றி காத்திருக்கிறது என்று கூறிய கமல்ஹாசன், எவிக்சனில் இருந்து நீங்கள் தப்பித்துவிட்டீர்கள் என்றும் கூறினார். இதனை அடுத்து சோமசுந்தரம் சந்தோஷம் அடைந்துள்ளார்.

ஒரு பக்கம் கமல்ஹாசனிடம் பாலாஜி தொடர்ந்து கண்டனம் பெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் சோமசுந்தரம் கமல்ஹாசனின் பாராட்டைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களில் பாலாஜி இல்லாத புரமோ அனேகமாக இதுவாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.