close
Choose your channels

இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்?

Monday, October 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பெறுபவர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும் என்பதும் அதேபோல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பது தெரிந்தது.

அந்த வகையில் நேற்று கடந்த வார நாமினேஷன் பட்டியலில் இருந்த சாந்தி குறைந்த வாக்குகள் பெற்றதாக வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வார நாமினேஷன் பட்டியலிலுக்கான புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த வாரத்தில் ரச்சிதா, ஆயிஷா, அசீம், மகேஷ்வரி, அசல், ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

கேம் விளையாடும் நேரத்தில் மட்டும் விளையாடிவிட்டு மற்ற நேரங்களில் அமைதியாக இருந்துவிடலாம் என ரச்சிதா நினைப்பதாக கூறப்பட்டது. மகேஷ்வரி ஏதாவது ஒரு பிரச்சனையை வளர்த்துவிடுகிறார் என்று காரணமாக கூறப்பட்டது.

எமோஷனலாகி அழுவதை மட்டுமே திட்டமாக வைத்துள்ளார் ஆயிஷா என குற்றஞ்சாட்டப்பட்டது. அசீம் சொல்வது ஒன்றாக உள்ளது, ஆனால் செய்வது ஒன்றுமே இல்லை என நாமினேஷன் செய்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த வீடியோவில் ரச்சிதா, ஆயிஷா, அசீம், மகேஷ்வரி, அசல் ஆகிய 5 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் முழுவதுமாக நாமினேஷன் செய்யப்பட்டவர்களின் பட்டியல் என்ன என்பதை பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.