close
Choose your channels

பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னருடன் நடித்த நடிகை திடீர் கைது: சிறையில் அடைப்பு!

Saturday, February 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் உடன் நடித்த நடிகை ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் நடித்த ’மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை காவியா தாப்பார். இவர் கடந்த வியாழக்கிழமை மும்பையில் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு தனது காரில் ஆண் நண்பருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மது அருந்தியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் அவர் பார்க்கிங் செய்யப்பட்ட கார் ஒன்றின் மோதியதாக கூறப்பட்ட புகாரில் அவரிடம் விசாரணை செய்ய பெண் கான்ஸ்டபிள் ஒருவர் விரைந்தார். ஆனால் அந்த பெண் கான்ஸ்டபிளிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்ட காவியா தாப்பார், அவரை பிடித்து கீழே தள்ளியதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து நடிகை காவியா தாப்பார் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து மும்பை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். விரைவில் அவரது தரப்பினர் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.