close
Choose your channels

ஜிலேபி பேபி பாடலுக்கு உச்சகட்ட கவர்ச்சியை காட்டிய பிக்பாஸ் தமிழ் நடிகை!

Sunday, January 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவரும், நடிகையுமான யாஷிகா, ஒருசில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான மற்றும் கிளுகிளுப்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்.

யாஷிகாவின் இந்த பதிவுகளை அவரது ஃபாலோயர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த நெட்டிசன்கள் ரசித்து பார்த்து வருகின்றனர் என்பதும், வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ’ஜிலேபி பேபி’ என்ற புகழ்பெற்ற இந்திப் பாடலின் ஒரு சில வரிகளுக்கு யாஷிகா நடனமாடிய வீடியோ அவரது இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் புகழ் பெற்ற இந்த ஜிலேபி பாடலுக்கு உச்சக்கட்ட கவர்ச்சி உடை அணிந்து, கவர்ச்சியான அசைவுகளுடன் கூடிய நடனத்தை யாஷிகா ஆடியுள்ள வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கமென்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக திரையுலகில் வாய்ப்புகள் கிடைக்காத நடிகைகள் உச்சக்கட்ட கவர்ச்சி வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வாய்ப்புகளை தேடி வரும் வகையில் யாஷிகாவும் இதுபோன்ற வீடியோவை வெளியிட்டு இருப்பது போல் தெரிகிறது. இதன் காரணமாக அவருக்கு திரையுலகில் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான ’ஜிலேபி பேபி’ என்ற இந்த பாடல் யூடியூபில் மிகப்பெரிய அளவில் வைரலாகி மில்லியன்கணக்கான பார்வையாளர்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.