close
Choose your channels
evp_raaga
kappan_us

'பிகில்' படத்தின் 'வெறித்தனம்' பாடல் லீக் ஆகிவிட்டதா?

Friday, August 23, 2019 • தமிழ் Comments

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் 'சிங்கப்பெணே பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலான 'வெறித்தனம்' என்ற பாடல் விரைவில் வெளிவரவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 'வெறித்தனம்' பாடல் திடீரென இணையத்தில் லீக் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பான செய்திகள் வெளிவந்துள்ளது. 'வெறித்தனம்' பாடல் விஜய் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சிங்கப்பெண்ணே பாடலும் லீக் ஆனதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த பாடலும் லீக் ஆகியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

ஆனால் 'வெறித்தனம்' பாடல் லீக் ஆகவில்லை என்றும், இந்த பாடல் விரைவில் வெளியாக ரசிகர்கள் செய்த தந்திரமாக இந்த லீக் மேட்டர் இருக்கலாம் என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் 'வெறித்தனம்' பாடல் அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz