close
Choose your channels

கணவர், குழந்தையுடன்… 43 வயதில் விஜய் பட நடிகை வெளியிட்ட அழகிய புகைப்படம் வைரல்!

Wednesday, May 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு தீம் பாடலுக்கு மட்டும் நடனமாடி இளசுகளின் மனதில் குடிக்கொண்ட நடிகை பிபாசா பாசு தற்போது 43 வயதில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2005 இல் நடிகர் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படம் “சச்சின்” இந்தத் திரைப்படத்தின் தீம் பாடலில் பாலிவுட் கவர்ச்சி நடிகை பிபாசா பாசு நடித்திருந்தார். அந்த அடிப்படையில் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இவர் நிறைய பாலிவுட் திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான "அலோன்" திரைப்படத்தில் நடித்தபோது நடிகர் கரண்சிங் குரோவருடன் காதல் ஏற்பட்டு 2016 இல் அவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு கடந்த நவம்பர் 2022 இல் அழகிய பெண் குழந்தை பிறந்த தகவல் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை குவித்தது.

மேலும் சமீபத்தில் தங்களது திருமண நாளை கொண்டாடிய பிபாசா பாசு மற்றும் கரண்சிங் குரோவர் தம்பதிகள் தற்போது தங்களது குழந்தை தேவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ‘குட்டி தேவதை‘ என்று தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.