close
Choose your channels

34 வயது பிரபல நடிகையை ரகசிய திருமணம் செய்து கொண்டாரா சல்மான்கான்? அதிர்ச்சி புகைப்படம்

Thursday, March 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் 34 வயது பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுவதால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயை காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகும் ஒரு சில பாலிவுட் நடிகைகளை சல்மான்கான் காதலித்து வந்ததாக கூறப்பட்டாலும், உறுதி செய்யப்பட்ட தகவல் எதுவும் வெளிவரவில்லை. தற்போது 56 வயது ஆகியும் இன்னும் சல்மான்கான் திருமணம் ஆகாமலே உள்ளார்.

இந்த நிலையில் பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹாவை சல்மான்கான் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியதோடு இருவரும் மோதிரம் மாற்றி கொள்ளும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகிறது.

இதுகுறித்து சல்மான்கான் தரப்பினர் இது போலியான புகைப்படம் என்று விளக்கம் அளித்துள்ளனர். ஆர்யா - சாயிஷா திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டோஷாப் செய்து சல்மான்கான் - சோனாக்ஷி சின்கா திருமணம் செய்து கொண்டதாக வதந்தியை கிளப்பி விட்டு இருப்பதாக நெட்டிசன்களி, உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து சல்மான் கான் - சோனாக்ஷி திருமணம் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.