close
Choose your channels

தமிழ் நடிகை இயக்கும் படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை: படப்பிடிப்பு ஆரம்பம்!

Friday, February 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகை ஒருவர் இயக்கும் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிராஜா இயக்கிய ’மண்வாசனை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரேவதி. இவர் அதன்பின் கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகையாக மட்டுமின்றி இயக்குனராகவும் ரேவதி சில படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை ரேவதி இயக்கும் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை காஜல் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக நடிகை கஜோல் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ‘சலாம் வெங்கி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டதாகவும் இது ஒரு புகைப்படத்தையும் கஜோல் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.