close
Choose your channels

ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கும் போனிகபூர்? இயக்குனர் யார் தெரியுமா?

Sunday, February 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், நெல்சன் இயக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் இந்த படத்தை வரும் தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் 170வது படம் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தயாரித்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தான் ரஜினியின் 170வது படத்தை தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ’கனா’ மற்றும் உதயநிதியின் ’நெஞ்சுக்கு நீதி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் ராஜா காமராஜ், ரஜினியின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.