close
Choose your channels

'சந்திரமுகி 2' படத்தின் மாஸ் தகவல்.. ரிலீஸ் எப்போது?

Saturday, May 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ என்ற திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது 18 ஆண்டுகள் கழித்து ’சந்திரமுகி 2’ படம் உருவாகி வருகிறது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் எம்எம் கீரவாணி இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது

இந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 17ஆம் தேதி மைசூரில் தொடங்க இருப்பதாகவும் சுமார் 15 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்புடன் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

அதன் பிறகு ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கிவிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவின் தயாராகி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ படம் லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது. ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் தோட்டா தரணி கலை இயக்கத்தில் உருவாகி வரும் பெரும் படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.