close
Choose your channels

'சார்லி' தமிழ் ரீமேக் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

Friday, February 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'சார்லி' மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியது. 'ஓகே கண்மணி' நாயகன் துல்கார் சல்மான் மற்றும் பார்வதி நடித்திருந்த இந்த படம் விரைவில் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் பிரமோத் பிலிம்ஸ் ஸ்ருதி நல்லப்பா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆகிய த்ரிஷயம், பெங்களூர் டேய்ஸ், உள்பட பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது இதில் 'சார்லி' படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.