close
Choose your channels

மகனுக்கு ஞானஸ்தானம் செய்த சாண்டி: வைரல் புகைப்படங்கள்

Tuesday, September 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடன இயக்குனர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி மாஸ்டருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பதையும் தனது மகனுக்கு அவர் ஷான் மைக்கேல் என்ற பெயரை வைத்தார் என்பதும் தெரிந்ததே. மேலும் தனது மகனின் புகைப்படங்களை அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தனது குழந்தை ஷான் மைக்கேலை சர்ச்சுக்கு அழைத்துச் சென்று ஞானஸ்நானம் செய்து உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் தனது குழந்தை கிறிஸ்துவ குழந்தையாக மாற்றப்பட்டதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ உள்பட ஒரு சில படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்து வரும் சாண்டி மாஸ்டர், கதாநாயகனாக ’3.33’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த திரைப்படம் சென்சாரில் ’யுஏ’ சான்றிதழ் பெற்ற நிலையில் விரைவில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.