close
Choose your channels

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இணைந்த திரைப்பட பிரபலம்.. தொடங்கும் தேதி அறிவிப்பு..!

Sunday, October 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற சீரியல் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்த கட்டமாக இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது.

முதல் பாகத்தில் நடித்த ஸ்டாலின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ள நிலையில் இரண்டாம் பாகத்தில் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கொள்கையை பின்பற்றும் மூன்று மகன்களின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 30ஆம் தேதி முதல் இரவு 8 மணிக்கு தினசரி ஒளிபரப்பாக இருக்கும் இந்த சீரியல்களில் ஸ்டாலின் ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலில் தற்போது திரைப்பட நடிகர் அஜய் ரத்தினம் இணைந்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்துள்ள இவ்வாறு ஒரு சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். ஆனால் இவர் எந்த கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

நடிகர் அஜய் ரத்னம் இந்த சீரியலில் இணைந்துள்ளதால் சீரியலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.